என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் மோதல்"
நெல்லை:
தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது55). விவசாய தொழிலாளி. இவர் மொபட்டில் தென்காசி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த பஸ் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தேன்பொத்தையை சேர்ந்த பஸ் டிரைவர் அருணாசலம் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையார் வள்ளுவ தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). அதே பகுதயை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர்கள் இருவரும் காரைக்காலில் உள்ள ஓ.என்ஜி.சி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பொறையாரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பொறையார் ராஜீவ்புரம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த புதுச்சேரி அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சின்னதுரையை பொறையாறு போலீசார் மீட்டு காரைககால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 38).
பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி மன்ற செயலராக இருந்தார். நேற்று மாலை வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். செட்டிபாளையம் சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியம் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது52). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து சங்கர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
முதலியார்பேட்டை தனியார் போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது பின்னால் புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த சங்கர் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ் மோதி பலியான சங்கருக்கு புவனா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
வில்லியனூர் ஆரியப்பாளையம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலி என்ற முத்தையன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று மாலை முத்தையன் வில்லியனூர்- ஆரியப்பாளையம் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக முத்தையன் மீது மோதியது.
இதில், முத்தையன் தலை மீது பஸ் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலாஜா:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.
சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பருமான மாவடியை சேர்ந்த குமாரும் (20) நேற்று இரவில் மோட்டார்சைக்கில் களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்றனர். சாலைப்புதூர் அடுத்த அண்ணா நகரில் சென்ற போது வள்ளியூரில் இருந்து களக்காடு நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குமாரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்